Sriman Narayaneeyam - Dasaka 73 - மதுரா புறப்படுதல் (ச்லோகம் 743)

Dasaka 73 - மதுரா புறப்படுதல்

சரம ப்ரஹரே ப்ரதிஷ்டமாந: ஸஹ பித்ரா நிஜ மித்ர மண்டலைச்ச ப்ரதிதாப பரம் நிதம்பிநீநாம் சமயிஷ்டயந் வ்யமுச: ஸகாயமேகம் சரம ப்ரஹரே ப்ரதிஷ்டமாந: ஸஹ பித்ரா நிஜ மித்ர மண்டலை: ச ப்ரதிதாப பரம் நிதம்பிநீநாம் சமயிஷ்டயந் வ்யமுச: ஸகாயம் ஏகம் चरमप्रहरे प्रतिष्ठमानः सह पित्रा निजमित्रमण्डलैश्च । परितापभरं नितम्बिनीनां शमयिष्यन् व्यमुचस्सखायमेकम्

குருவாயூரப்பா! நீ அன்று இரவு கடைசி ஜாமத்தில் உனது தந்தையுடனும் நண்பர்களுடனும் புறப்படத் தயாரானாய். அந்த நேரம் உன்னையே நினைத்து வருந்திய கோபிகைகளின் துயரத்தை நீக்க விரும்பினாய். அவர்களிடம் உனது தோழன் ஒருவனை அனுப்பினாய் அல்லவா?