Sriman Narayaneeyam - Dasaka 73 - மதுரா புறப்படுதல் (ச்லோகம் 742)

Dasaka 73 - மதுரா புறப்படுதல்

கருணாநிதிரேஷ நந்தஸூநு: கதமஸ்மாந் விஸ்ருஜேநநந்யநாதா: பத ந: கிமு தைவமேவமாஸீத் இதி தாஸ்த்வத்கத மாநஸா விலேபு: கருணா நிதி: ஏஷ நந்த ஸூநு: கதம் அஸ்மாந் விஸ்ருஜேத் அநந்யநாதா: பத ந: கிமு தைவம் ஏவம் ஆஸீத் இதி தா: த்வத் கத மாநஸா விலேபு: करुणानिधिरेषु नन्दसूनुः कथमस्मान् विसृजेदनन्यनाथाः । बत नः किमु दैवमेवमासीदिति तास्त्वद्गतमानसा विलेपुः

குருவாயூரப்பா! உன்னிடம் இத்தனை நாட்கள் தங்கள் மனதை பறி கொடுத்திருந்த அந்த கோபிகைகள், “நந்தகோபரின் இந்த மகன் மிகவும் கருணை உள்ளவன் ஆயிற்றே! நமக்கு அவனைத் தவிர நம்மைக் காப்பாற்றும் தெய்வம் வேறு எதுவும் இல்லையே? அவன் எப்படி நம்மைக் கை நழுவ இயலும்? இது நமது விதி என்றே கூற வேண்டும்”, என்று பலவாகப் புலம்பினார்கள்.