Sriman Narayaneeyam - Dasaka 73 - மதுரா புறப்படுதல் (ச்லோகம் 741)
Dasaka 73 - மதுரா புறப்படுதல்
நிசமய்ய தவாத யாந வார்த்தாம் ப்ருசமார்த்தா: பசுபால பாலிகாஸ்தா: கிமிதம் கிமிதம் கதம் ந்விதீமா: ஸமவேதா: பரிதேவிதாந்யகுர்வந் निशमय्य तवाथ यानवार्तां भृशमार्ताः पशुपालबालिकास्ताः । किमिदं किमिदं कथं न्वितीमाः समवेताः परिदेवितान्यकुर्वन्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ மதுரா நகரத்திற்குச் செல்லப் போவதை கோபிகைகள் அறிந்தனர். அவர்கள் மிகவும் வருத்தம் கொண்டனர். அனைவரும், “இது எப்படி நடந்தது? ஏன் இப்படி நடந்தது?”, என்று புலம்பினர்.விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x, அத்யாயங்கள் 39 மற்றும் 40; x-41-1 முதல் x-41-3 ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.