Sriman Narayaneeyam - Dasaka 72 - அக்ரூரர் ப்ருந்தாவனம் வருதல் (ச்லோகம் 740)

Dasaka 72 - அக்ரூரர் ப்ருந்தாவனம் வருதல்

சந்த்ரா க்ருஹே கிமுத சந்த்ரபகா க்ருஹே நு ராதா க்ருஹே நு பவநே கிமு மைத்ரவிந்தே தூர்தோ விலம்பத இதி ப்ரமதாபிருச்சை: ஆசங்கிதோ நிசி மருத் புர நாத பாயா: சந்த்ரா க்ருஹே கிம் உத சந்த்ரபகா க்ருஹே நு ராதா க்ருஹே நு பவநே கிமு மைத்ரவிந்தே தூர்த: விலம்பத இதி ப்ரமதாபி உச்சை: ஆசங்கித: நிசி மருத் புர நாத பாயா: चन्द्रागृहे किमुत चन्द्रभगागृहे नु राधागृहे नु भवने किमु मैत्रविन्दे । धूर्त्तो विलम्बत इति प्रमदाभिरुच्चै - राशङ्कितो निशि मरुत्पुरनाथ पायाः

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! (நீ அன்று இரவு வராதது கண்டு) கோபிகைகள், “இந்தக் க்ருஷ்ணன் ஏன் வரவில்லை? அவன் சந்திராவின் வீட்டிலோ, சந்த்ரபகா வீட்டிலோ, ராதாவின் வீட்டிலோ அல்லது மித்திர விந்தையின் வீட்டிலோ தங்கி விட்டான் போல் உள்ளதே!”, என்று சந்தேகம் கொண்டனர். இப்படியாக பல லீலைகள் புரிந்த நீ என்னைக் காப்பாற்ற வேண்டும்.***