Sriman Narayaneeyam - Dasaka 72 - அக்ரூரர் ப்ருந்தாவனம் வருதல் (ச்லோகம் 739)

Dasaka 72 - அக்ரூரர் ப்ருந்தாவனம் வருதல்

நந்தேந ஸாகமமிதாதரமர்சயித்வா தம் யாதவம் ததுதிதாம் நிசமய்ய வார்த்தாம் கோபேஷு பூபதி நிதேச கதாம் நிவேத்ய நாநா கதாபிரிஹ தேந நிசாமநைஷீ: நந்தேந ஸாகம் அமித ஆதரம் அர்சயித்வா தம் யாதவம் தத் உதிதாம் நிசமய்ய வார்த்தாம் கோபேஷு பூபதி நிதேச கதாம் நிவேத்ய நாநா கதாபி இஹ தேந நிசாம் அநைஷீ: नन्देन साकममितादरमर्चयित्वा तं यादवं तदुदितां निशमय्य वार्ताम् । गोपेषु भूपतिनिदेशकथां निवेद्य नानाकथाभिरिह तेन निशामनैषीः

குருவாயூரப்பா! யாதவ குலத்தில் பிறந்தவரான அந்த அக்ரூரரை நந்தகோபர் உட்பட நீங்கள் அனைவரும் வெகுவாக மரியாதை செய்தீர்கள். பின்னர் அவர் கம்சனிடம் இருந்த உங்களுக்கு வந்த அழைப்பைக் கூறினார். அதன் பின்னர் உன் வீட்டில் அன்று இரவு முழுவதும் அக்ரூரருடன் பலவிதமான கதைகளைப் பேசிக் கழித்தாயாமே!