Sriman Narayaneeyam - Dasaka 72 - அக்ரூரர் ப்ருந்தாவனம் வருதல் (ச்லோகம் 738)
Dasaka 72 - அக்ரூரர் ப்ருந்தாவனம் வருதல்
தூராத் ரதாத் ஸமவருஹ்ய நமந்தமேநம் உத்தாப்ய பக்த குல மௌலிமதோபகூஹந் ஹர்ஷாந்மிதாக்ஷர கிரா குசலாநுயோகீ பாணிம் ப்ரக்ருஹ்ய ஸபலோSத க்ருஹம் நிநேத தூராத் ரதாத் ஸமவருஹ்ய நமந்தம் ஏநம் உத்தாப்ய பக்த குல மௌலிம் அத உபகூஹந் ஹர்ஷாத் மித அக்ஷர கிரா குசல அநுயோகீ பாணிம் ப்ரக்ருஹ்ய ஸபல: அத க்ருஹம் நிநேதே दूराद्रथात्समवरुह्य नमन्तमेनमुत्थाप्य भक्तकुलमौलिमथोपगूहन् । हर्षान्मिताक्षरगिरा कुशलानुयोगी पाणिं प्रग्र्ह्य सबलोऽथ गृहं निनेथ
குருவாயூரப்பா! அப்போது தூரத்தில் தனது தேரில் இருந்து அக்ரூரர் இறங்கி உன்னிடம் வந்து வணங்கினார். பக்தர்களில் உயர்ந்தவரான அவரை நீ தூக்கி எழுப்பி மிகுந்த அன்புடன் அணைத்துக் கொண்டாய். இருவரின் உள்ளமும் மகிழ்ந்ததால் சொற்கள் வரவில்லை. குறைந்த சொற்கள் மட்டுமே கொண்டு அவரை நீ நலம் விசாரித்தாய். பின்னர் நீயும் பலராமனும் சேர்ந்து அவரது கைகளைப் பிடித்து உங்கள் வீட்டிற்குள் அழைத்துச் சென்றீர்கள் அல்லவா?