Sriman Narayaneeyam - Dasaka 72 - அக்ரூரர் ப்ருந்தாவனம் வருதல் (ச்லோகம் 737)
Dasaka 72 - அக்ரூரர் ப்ருந்தாவனம் வருதல்
ஸாயந்தநாப்லவ விசேஷ விவிக்த காத்ரௌ த்வௌ பீத நீல ருசிராம்பர லோபநீயௌ நாதி ப்ரபஞ்ச த்ருத பூஷண சாரு வேஷௌ மந்த ஸ்மிதார்த்ர வதநௌ ஸ யுவாம் ததர்ச ஸாயந்தந ஆப்லவ விசேஷ விவிக்த காத்ரௌ த்வௌ பீத நீல ருசிர அம்பர லோபநீயௌ நாதி ப்ரபஞ்ச த்ருத பூஷண சாரு வேஷௌ மந்த ஸ்மித ஆர்த்ர வதநௌ ஸ யுவாம் ததர்ச सायन्तनाप्लवविशेषविविक्तगात्रौ द्वौ पीतनीलरुचिराम्बरलोभनीयौ । नातिप्रपञ्चधृतभूषणचारुवेषौ मन्दस्मितार्द्रवदनौ स युवां ददर्श
குருவாயூரப்பா! மாலை வேளையாக இருந்ததால், நீயும் உனது அண்ணனும் குளித்து விட்டு மிகவும் சுத்தமாக நின்றீர்கள். நீ மஞ்சள் பட்டும், உனது அண்ணன் நீலப்பட்டும் அணிந்திருந்தீர்கள். உங்கள் திருமேனியில் சிறிது மட்டுமே ஆபரணங்கள் இருந்ததால் மிகவும் அழகாகவே இருந்தீர்கள். இருவரின் முகத்திலும் புன்னகை அரும்பியது. இப்படியாக உன்னை அக்ரூரர் கண்டாராமே!