Sriman Narayaneeyam - Dasaka 72 - அக்ரூரர் ப்ருந்தாவனம் வருதல் (ச்லோகம் 736)
Dasaka 72 - அக்ரூரர் ப்ருந்தாவனம் வருதல்
தாவத் ததர்ச பசு தோஹ விலோக லோலம் பக்தோத்தமாகதிமிவ ப்ரதிபாலயந்தம் பூமந் பவந்தமயமக்ரஜவந்தமந்த: ப்ரஹ்மாநுபூதி ரஸ ஸிந்துமிவோத்வமந்தம் தாவத் ததர்ச பசு தோஹ விலோக லோலம் பக்த உத்தம ஆகதிம் இவ ப்ரதிபாலயந்தம் பூமந் பவந்தம் அயம் அக்ரஜவந்தம் அந்த: ப்ரஹ்ம அநுபூதி ரஸ ஸிந்தும் இவ உத்வமந்தம் तावद्ददर्श पशुदोहविलोकलोलं भक्तोत्तमागतिमिव प्रतिपालयन्तम् । भूमन् भवन्तमयमग्रजवन्तमन्त - र्ब्रह्मानुभूतिरससिन्धुमिवोद्वमन्तम्
குருவாயூரப்பா! எங்கும் உள்ளவனே! அக்ரூரர் வந்த நேரத்தில் நீ பசுக்கள் பால் கறப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாய். உனது அண்ணனான பலராமன் அருகில் இருந்தான். உனது சிறந்த பக்தன் ஒருவன் வரப்போகிறான் என நீ மிகவும் ஆவலுடன் காணப்பட்டாய். இதனால் உனது உள்ளம் ஆனந்தம் நிரம்பி அது வெளி வருவது போல் காட்சி அளித்தாய். இப்படியாக உன்னை அக்ரூரர் கண்டார் அல்லவா?