Sriman Narayaneeyam - Dasaka 72 - அக்ரூரர் ப்ருந்தாவனம் வருதல் (ச்லோகம் 735)
Dasaka 72 - அக்ரூரர் ப்ருந்தாவனம் வருதல்
ஸாயம் ஸ கோப பவநாநி பவச்சரித்ர கீதாம்ருத ப்ரஸ்ருத கர்ண ரஸாயநாநி பச்யந் ப்ரமோத ஸரிட்ஏவ கிலோஹ்யமாநோ கச்சந் பவத் பவந ஸந்நிதமந்வயாஸீத் ஸாயம் ஸ கோப பவநாநி பவத் சரித்ர கீத அம்ருத ப்ரஸ்ருத கர்ண ரஸாயநாநி பச்யந் ப்ரமோத ஸரிதா இவ கில உஹ்யமாந: கச்சந் பவத் பவந ஸந்நிதம் அந்வயாஸீத் सायं स गोपभवनानि भवच्चरित्र - गीतामृतप्रसृतकर्णरसायनानि । पश्यन् प्रमोदसरिदेव किलोह्यमानो गच्छन् भवद्भवन सन्निधिमन्वयासीत्
குருவாயூரப்பா! அக்ரூரர் ப்ருந்தாவனம் வந்து சேர்ந்த வேளை மாலை வேளையாகும். அப்போது அனைத்து கோபர்களின் வீடுகளில் இருந்தும் உனது லீலைகளைப் பற்றிய இனிமையான பாடல்கள் ஒலித்தன. அவை காதுகளுக்கு மிகுந்த இன்பம் அளிப்பதாக இருந்தன. அந்த வீடுகளைப் பார்த்துக் கொண்டே அக்ரூரர் சென்றார். அந்தக் கானம் என்னும் வெள்ளத்தில் அடித்து அழைத்து வரப்பட்டவராக உனது வீட்டின் வாயிலில் வந்து நின்றாராமே!