Sriman Narayaneeyam - Dasaka 72 - அக்ரூரர் ப்ருந்தாவனம் வருதல் (ச்லோகம் 734)

Dasaka 72 - அக்ரூரர் ப்ருந்தாவனம் வருதல்

பச்யந்நவந்தத பவத் விஹ்ருதி ஸ்தலாநி பாம்ஸுஷ்வவேஷ்டத பவச்சரணாங்கிதேஷு கிம் ப்ரூமஹே பஹு ஜநா ஹி ததாபி ஜாதா ஏவம் து பக்தி தரலா விரலா: பராத்மந் பச்யந் அவந்தத பவத் விஹ்ருதி ஸ்தலாநி பாம்ஸுஷு அவேஷ்டத பவத் சரண அங்கிதேஷு கிம் ப்ரூமஹே பஹுஜநா ஹி ததா அபி ஜாதா ஏவம் து பக்தி தரலா விரலா: பராத்மந் पश्यन्नवन्दत भवद्विहृतिस्थलानि पांसुष्ववेष्टत भवच्चरणाङ्कितेषु । किं ब्रूमहे बहुजना हि तदापि जाता एवं तु भक्तितरला विरळाः परात्मन्

குருவாயூரப்பா! பரம்பொருளே! அக்ரூரர், நீ விளையாடிய இடங்களைக் கண்டு வணங்கினார். உனது திருவடிகள் பதிந்திருந்த அந்தப் பூமியில் விழுந்து புரண்டார். அவரது நிலையை நான் எப்படிக் கூறுவேன்? உனது காலத்தில் பல பக்தர்கள் பிறந்திருந்தபோதிலும், அக்ரூரர் அளவிற்குப் பக்திப் பரவசம் பெற்றவர்கள் சிலரே ஆவர்.