Sriman Narayaneeyam - Dasaka 72 - அக்ரூரர் ப்ருந்தாவனம் வருதல் (ச்லோகம் 733)

Dasaka 72 - அக்ரூரர் ப்ருந்தாவனம் வருதல்

பூய: க்ரமாதபிவிசந் பவதங்க்ரி பூதம் ப்ருந்தாவநம் ஹர விரிஞ்ச ஸுராபிவந்த்யம் ஆநந்த மக்ந இவ லக்ந இவ ப்ரமோஹே கிம் கிம் தசாந்தரமவாப ந பங்கஜாக்ஷ பூய: க்ரமாத் அபிவிசந் பவத் அங்க்ரி பூதம் ப்ருந்தாவநம் ஹர விரிஞ்ச ஸுர அபிவந்த்யம் ஆநந்த மக்ந இவ லக்ந இவ ப்ரமோஹே கிம் கிம் தசாந்தரம் அவாப ந பங்கஜ அக்ஷ भूयः क्रमादभिविशन् भ्वदङ्घ्रिपूतं बृन्दावनं हरविरिञ्चसुराभिवन्द्यम् । आनन्दमग्न इव लग्न इव प्रमोहे किं किं दशान्तरमवाप न पङ्कजाक्ष

குருவாயூரப்பா! தாமரை போன்ற அழகான கண்களை உடையவனே! அந்தப் ப்ருந்தாவனமானது, உனது திருவடிகள் பட்டதால் மிகவும் புண்ணியமான பூமியாகத் திகழ்ந்தது. (இதனால்) சிவன், நான்முகன் ஆகியோர் வணங்கும் இடமாக ஆனது. இப்படிப்பட்ட ப்ருந்தாவனத்திற்கு அக்ரூரர் வந்தார். அவர் அங்கு நுழைந்தவுடன் ஆனந்தக் கடலில் மூழ்கியவராகவும். மெய்ம்மறந்து உள்ள நிலையினை அடைந்தவராகவும் ஆனார். இப்படியாக அவர் அனுபவித்த இன்பங்கள் எத்தனை எத்தனை?