Sriman Narayaneeyam - Dasaka 72 - அக்ரூரர் ப்ருந்தாவனம் வருதல் (ச்லோகம் 732)
Dasaka 72 - அக்ரூரர் ப்ருந்தாவனம் வருதல்
த்ரக்ஷ்யாமி வேத சத கீத கதிம் புமாம்ஸம் ஸ்ப்ரக்ஷ்யாமி கிம்ஸ்வித் அபி நாம பரிஷ்வஜேயம் கிம் வக்ஷ்யதே ஸ கலு மாம் க்வநு வீக்ஷித: ஸ்யாத் இத்தம் நிநாய ஸ பவந்மயமேவ மார்க்கம் த்ரக்ஷ்யாமி வேத சத கீத கதிம் புமாம்ஸம் ஸ்ப்ரக்ஷ்யாமி கிம்ஸ்வித் அபி நாம பரிஷ்வஜேயம் கிம் வக்ஷ்யதே ஸ கலு மாம் க்வநு வீக்ஷித: ஸ்யாத் இத்தம் நிநாய ஸ பவந்மயம் ஏவ மார்க்கம் द्रक्ष्यामि देवशतगीतगतिं पुमांसं स्प्रक्ष्यामि किंस्विदपि नाम परिष्वजेयम् । किं वक्ष्यते स खलु मां क्वनु वीक्षितः स्यादित्थं निनाय स भवन्मयमेव मार्गम्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! “வேதங்கள் நூற்றுக்கணக்கான ச்லோகங்கள் மூலம் அவனைப் புகழ்கின்றன. அவை கூறும் வழிகள் மூலம் அடைய வேண்டிய அவனை நான் பார்க்க இயலுமா? தொட இயலுமா? அணைத்துக் கொள்ள முடியுமா? என்னிடம் அவன் பேசுவானா? அவன் எங்கு இருப்பான்?”, என்று தனது மனதில் அக்ரூர் சிந்தித்தார். அந்த வழி முழுவதும் நீ உள்ளதாகவே எண்ணி வந்தாராமே!