Sriman Narayaneeyam - Dasaka 72 - அக்ரூரர் ப்ருந்தாவனம் வருதல் (ச்லோகம் 731)
Dasaka 72 - அக்ரூரர் ப்ருந்தாவனம் வருதல்
ஸோSயம் ரதேந ஸுக்ருதீ பவதோ நிவாஸம் கச்சந் மநோரத கணாம்ஸ்த்வயி தார்யமாணாந் ஆஸ்வாதயந் முஹுரபாயபயேந தைவம் ஸம்ப்ரார்த்தயந் பதி ந கிஞ்சிதபி வ்யஜாநாத் ஸ அயம் ரதேந ஸுக்ருதீ பவத: நிவாஸம் கச்சந் மநோரத கணாம் த்வயி தார்யமாணாந் ஆஸ்வாதயந் முஹு: அபாய பயேந தைவம் ஸம்ப்ரார்த்தயந் பதி ந கிஞ்சித் அபி வ்யஜாநாத் सोऽयं रथेन सुकृती भवतो निवासं गच्छन् मनोरथगणांस्त्वयि धार्यमाणान् । आस्वादयन् मुहुरपायभयेन दैवं संप्रार्थयन् पथि न किञ्चिदपि व्यजानात्
குருவாயூரப்பா! மிகுந்த புண்ணியம் செய்திருந்த அந்த அக்ரூரர் தனது தேரில் ஏறி நீ வாசம் செய்யும் இடமான வ்ரஜ பூமிக்கு விரைந்தார். அவர் உன்னிடம் அனுபவிக்க வேண்டும் என்று மனதில் வைத்திருந்த தனது விருப்பங்களை வழி முழுவதும் எண்ணிக் களித்தார். அந்த விருப்பங்கள் நிறைவேறாமல் போய்விடுமோ என்று பயந்து தெய்வத்தை வேண்டிக் கொண்டார். இதனால் தனது பாதையில் இருந்த எதையுமே அவர் உணரவில்லை.