Sriman Narayaneeyam - Dasaka 72 - அக்ரூரர் ப்ருந்தாவனம் வருதல் (ச்லோகம் 730)
Dasaka 72 - அக்ரூரர் ப்ருந்தாவனம் வருதல்
அக்ரூர ஏஷ பவதங்க்ரி பரச்சிராய த்வத் தர்சநாக்ஷம மநா: க்ஷிதிபால பீத்யா தஸ்யாஜ்ஞயைவ புநரீக்ஷிதுமுதயதஸ்த்வாம் ஆநந்த பாரமதிபூரிதரம் பபார அக்ரூர ஏஷ பவத் அங்க்ரி பர: சிராய த்வத் தர்சந அக்ஷம மநா: க்ஷிதிபால பீத்யா தஸ்ய ஆஜ்ஞயா ஏவ புந: ஈக்ஷிதும் உதயத: த்வாம் ஆநந்த பாரம் அதி பூரிதரம் பபார अक्रूर एष भवदङ्घ्रिपरश्चिराय त्वद्दर्शनाक्षममनाः क्षितिपालभीत्या । तस्याज्ञयैव पुनरीक्षितुमुद्यतस्त्वाम आनन्दभारमतिभूरितरं बभार
குருவாயூரப்பா! அந்த அக்ரூரர் உன்னைக் கண்டு உன் தரிசனம் பெற வேண்டும் என்று பல நாட்களாக எண்ணம் கொண்டிருந்தார். ஆயினும் கம்ஸனிடம் இருந்த பயத்தால் அவர் உன்னைக் காண வரத் துணியவில்லை. இப்போது கம்ஸனே வ்ரஜ பூமிக்குச் செல்லும்படி கட்டளை இட்டான். இதனால் உன்னைக் காணும் வாய்ப்பு தானாகவே கிட்டியதை எண்ணி அக்ரூரரின் மனம் பெரும் ஆனந்தம் அடைந்தது.