Sriman Narayaneeyam - Dasaka 72 - அக்ரூரர் ப்ருந்தாவனம் வருதல் (ச்லோகம் 729)

Dasaka 72 - அக்ரூரர் ப்ருந்தாவனம் வருதல்

கம்ஸோSதி நாரதகிரா வ்ரஜ வாஸிநம் த்வாம் ஆகர்ண்ய தீர்ண ஹ்ருதய: ஸ ஹி காந்திநேயம் ஆஹூய கார்முக மகச்சலதோ பவந்தம் ஆநேதுமேநமஹிநோதஹிநாதசாயிந் கம்ஸ: அதி நாரத கிரா வ்ரஜ வாஸிநம் த்வாம் ஆகர்ண்ய தீர்ண ஹ்ருதய: ஸ ஹி காந்திநேயம் ஆஹூய கார்முக மக: சலத: பவந்தம் ஆநேதும் ஏநம் அஹிநோத் அஹிநாதசாயிந் कंसोऽथ नारदगिरा व्रजवासिनं त्वामाकर्ण्य दीर्णहृदयः स हि गान्दिनेयम् । आहूय कार्मुकमखच्छलतो भवन्तमानेतुमेन महिनोदहिनाथशायिन्

ஆதிசேஷன் மீது சயனித்துள்ளவனே! க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ வ்ரஜ பூமியில் உள்ளதாக நாரதர் கம்ஸனிடம் கூறினார். இதனைக் கேட்ட கம்ஸன் மனம் கலங்கினான். அச்சம் கொண்டான். உடனே அவன், காந்தினி என்பவரின் மகனான அக்ரூரர் என்பவரை அழைத்தான். தனுர்யாகம் என்ற பெயரில் தனது அரண்மனைக்கு அழைத்து வர அவனை உன்னிடம் அனுப்பினான்.விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x, அத்யாயம் 38ன் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.