Sriman Narayaneeyam - Dasaka 71 - கேசி வதம், வியோம வதம் (ச்லோகம் 728)
Dasaka 71 - கேசி வதம், வியோம வதம்
ஏவம் விதைச்சாத்புத கேளி பேதை: ஆநந்த மூர்ச்சாமதுலாம் வ்ரஜஸ்ய பதே பதே நூதநயந்நஸீமாம் பராத்ம ரூபிந் பவநேச பாயா: ஏவம் விதை: ச அத்புத கேளி பேதை: ஆநந்த மூர்ச்சாம் அதுலாம் வ்ரஜஸ்ய பதே பதே நூதநயந் அஸீமாம் பராத்ம ரூபிந் பவந ஈச பாயா: एवं विधैश्चाद्भुतकेलिभेदैरानन्दमूर्छामतुलां व्रजस्य । पदे पदे नूतनयन्नसीमां परात्मरूपिन् पवनेश पायाः
பரமாத்ம ஸ்வரூபமே! க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இப்படியாக உனது பலவிதமான அற்புத விளையாட்டுக்கள் மூலம் வ்ரஜ பூமியில் இருந்த ஆயர்களுக்கு மிகுந்த ஆனந்தத்தை அளித்தாய். மேலும் எல்லையில்லாத பல லீலைகளாலும், புதிது புதிதான லீலைகளாலும் அவர்களை நீ மயக்கினாய். இப்படிப்பட்ட நீ என்னைக் காக்க வேண்டும்.***