Sriman Narayaneeyam - Dasaka 71 - கேசி வதம், வியோம வதம் (ச்லோகம் 727)
Dasaka 71 - கேசி வதம், வியோம வதம்
ஸ சோர பாலாயித வல்லவேஷு சோராயிதோ கோப சிசூந் பசூந் ச குஹாஸு க்ருத்வா பிததே சிலாபி: த்வயா ச புத்த்வா பரிமர்திதோSபூத் ஸ சோர பாலாயித வல்லவேஷு சோராயித: கோப சிசூந் பசூந் ச குஹாஸு க்ருத்வா பிததே சிலாபி: த்வயா ச புத்த்வா பரிமர்தித: அபூத் स चोरपालायितवल्लवेषु चोरायितो गोपशिशून् पशूंश्च । गुहासु कृत्वा पिदधे शिलाभिस्त्वया च बुद्ध्वा परिमर्दितोऽभूत्
குருவாயூரப்பா! அந்த ஆயர் சிறுவர்கள் திருடர்களாக ஒரு பிரிவும், காவலர்களாக ஒரு பிரிவும் எனப் பிரிந்து விளையாடினர். அவர்களில் திருடர் பிரிவில் ஒருவனாக, தந்திரமான முறையில், அந்த அசுரன் நுழைந்தான். அப்போது மிகவும் வஞ்சகமாக ஆயர் சிறுவர்களையும், பசுக்களையும் ஒரு பெரிய குகையில் அடைத்து, அதன் வாயிலை ஒரு பெரிய கல்லைக் கொண்டு மூடியும் விட்டான் அல்லவா? இதனை அறிந்த நீ உடன் அங்கு சென்று அவனைக் கொன்றாயாமே!