Sriman Narayaneeyam - Dasaka 71 - கேசி வதம், வியோம வதம் (ச்லோகம் 726)

Dasaka 71 - கேசி வதம், வியோம வதம்

கதாபி கோபை: ஸஹ காநநாந்தே நிலாயந க்ரீடந லோலுபம் த்வாம் மயாத்மஜ: ப்ராப துரந்த மாயோ வ்யோமாபிதோ வ்யோம சரோபரோதீ கதாபி கோபை: ஸஹ காநநாந்தே நிலாயந க்ரீடந லோலுபம் த்வாம் மய ஆத்மஜ: ப்ராப துரந்த மாய: வ்யோம அபித: வ்யோம சர உபரோதீ कदापि गोपैः सह काननान्ते निलायनक्रीडनलोलुपं त्वाम् । मयात्मजः प्राप दुरन्तमायो व्योमाभिधो व्योमचरोपरोधी

குருவாயூரப்பா! ஒருமுறை நீ ஆயர் சிறுவர்களுடன் காட்டில் ஒளிந்து விளையாடும் விளையாட்டை அனுபவித்துக் கொண்டிருந்தாய். அப்போது தேவர்களைத் துன்புறுத்துவதில் வல்லவனும், மயன் என்ற அசுரனின் மகனும் ஆகிய வ்யோமன் என்ற அசுரன் அங்கு வந்தான் அல்லவா?