Sriman Narayaneeyam - Dasaka 71 - கேசி வதம், வியோம வதம் (ச்லோகம் 725)
Dasaka 71 - கேசி வதம், வியோம வதம்
கம்ஸாய தே சௌரி ஸுதத்வமுக்த்வா தம் தத் வதோத்கம் ப்ரதிருத்ய வாசா ப்ராப்தேந கேசி க்ஷபணாவஸாநே ஸ்ரீநாரதேந த்வமபிஷ்டுதோSபூ: கம்ஸாய தே சௌரி ஸுதத்வம் உக்த்வா தம் தத் வத உத்கம் ப்ரதிருத்ய வாசா ப்ராப்தேந கேசி க்ஷபண அவஸாநே ஸ்ரீநாரதேந த்வம் அபிஷ்டுத: அபூ: कंसाय ते शौरिसुतत्वमुक्त्वा तं तद्वधोत्कं प्रतिरुध्य वाचा । प्राप्तेन केशिक्षपणावसाने श्रीनारदेन त्वमभिष्टुतोऽभूः
குருவாயூரப்பா! அப்போது நாரத முனிவர் கம்சனிடம் சென்று, நீ வஸுதேவரின் மகன் ஆவாய் என்று கூறினார். உடனே அவனும் கோபம் கொண்டு வஸுதேவரைக் கொல்லத் தயாராகப் புறப்பட்டான். ஆயினும் நாரதர் அவனை நல்வார்த்தை கூறித் தடுத்தார். அந்த நேரம் கேசி வதம் முடிந்தது. நாரதரும் உன்னை வந்து துதித்தார் அல்லவா?