Sriman Narayaneeyam - Dasaka 71 - கேசி வதம், வியோம வதம் (ச்லோகம் 724)
Dasaka 71 - கேசி வதம், வியோம வதம்
ஆலம்ப மாத்ரேண பசோ: ஸுராணாம் ப்ரஸாதகே நூத்ந இவாச்வமேதே க்ருதே த்வயா ஹர்ஷ வசாத் ஸுரேந்த்ரா: த்வாம் துஷ்டுவு: கேசவ நாமதேயம் ஆலம்ப மாத்ரேண பசோ: ஸுராணாம் ப்ரஸாதகே நூத்ந இவ அச்வமேதே க்ருதே த்வயா ஹர்ஷவசாத் ஸுரேந்த்ரா: த்வாம் துஷ்டுவு: கேசவ நாமதேயம் आलम्भमात्रेण पशोः सुराणां प्रसादके नूत्न इवाश्वमेधे । कृते त्वया हर्षवशात् सुरेन्द्रास्त्वां तुष्टुवुः केशवनामधेयम्
குருவாயூரப்பா! மந்திரங்கள் அல்லது பசு வதை போன்றவை கொண்டு இயற்றும் யாகங்களே தேவர்களுக்கு மகிழ்வு அளிக்கும். ஆனால் நீயோ இவை எதுவும் இல்லாமல், குதிரையை அழித்து அச்வமேத யாகம் இயற்றினாய். இதனைக் கண்டு மகிழ்ந்த தேவர்கள், உனக்கு (கேசி என்பவனை அழித்தவன் என்று பொருள் வருமாறு) கேசவன் என்று பெயர் வைத்தனர்.