Sriman Narayaneeyam - Dasaka 71 - கேசி வதம், வியோம வதம் (ச்லோகம் 723)

Dasaka 71 - கேசி வதம், வியோம வதம்

த்வம் வாஹ தண்டே க்ருததீச்ச பாஹ தண்டம் ந்யதாஸ்தஸ்ய முகே ததாநீம் தத் வ்ருத்தி ருத்தச்வஸநோ கதாஸு: ஸப்தீபவந்நப்யயமைக்யமாகாத் த்வம் வாஹ தண்டே க்ருததீ: ச பாஹ தண்டம் ந்யதா: தஸ்ய முகே ததாநீம் தத் வ்ருத்தி ருத்த ச்வஸந: கதாஸு: ஸப்தீபவந் அபி அயம் ஐக்யம் ஆகாத் त्वं वाहदण्डे कृतधीश्च बाहादण्डं न्यधास्तस्य मुखे तदानीम् । तद्वृद्धिरुद्धश्वसनो गतासुः सप्तीभवन्नप्ययमैक्यमागात्

குருவாயூரப்பா! நீ அந்தக் குதிரையைத் தண்டிப்பதில் (பாஹ தண்டே) மிகுந்த உறுதி கொண்டாய். ஆகையால் தடி போன்று உனது திருக்கரத்தை (பாஹ தண்டம்), அவனது வாயில் நுழைத்தாய் அல்லவா? இதனால் அவனது சுவாசம் தடைப்பட்டது. அவன் மூச்சுத் திணறி, குதிரையாக இருந்தபோதிலும் உன்னுடன் ஐக்கியமாகி மோக்ஷம் பெற்றான்.