Sriman Narayaneeyam - Dasaka 71 - கேசி வதம், வியோம வதம் (ச்லோகம் 722)

Dasaka 71 - கேசி வதம், வியோம வதம்

ப்ரவஞ்சயந்நஸ்ய குராஞ்சலம் த்ராக் அமுஞ்ச விக்ஷேபித தூர தூரம் ஸம்மூர்ச்சிதோSபி ஹ்யதி மூர்ச்சிதேந க்ரோதோஷ்மணா காதிதுமாத்ருதஸ்த்வாம் ப்ரவஞ்சயந் அஸ்ய குர அஞ்சலம் த்ராக் அமும் ச விக்ஷேபித தூர தூரம் ஸம்மூர்ச்சித: அபி ஹி அதி மூர்ச்சிதேந க்ரோத ஊஷ்மணா காதிதும் அத்ருத: த்வாம் प्रवञ्चयन्नस्य खुराञ्चलं द्रागमुं च विक्षेपिथ दूरदूरम् । संमूर्छितोऽपि ह्यतिमूर्छितेन क्रोधोष्मणा खादितुमाद्रुतस्त्वाम्

குருவாயூரப்பா! அவன் உன்னை உதைத்தபோது, நீ அவனது குளம்புகள் உன்மீது படாதபடி சாமர்த்தியமாக விலகினாய். அதே நேரம் அவனை உனது கால்களால் உதைத்து அவன் வெகு தூரம் சென்று விழுமாறு செய்தாய். அவன் தூரத்தில் விழுந்து மயக்கம் உற்றான். இருந்தாலும் எழுந்த அவன் மிகுந்த கோபத்துடன் உன்னை விழுங்க வேகமாக ஓடி வந்தானாமே!