Sriman Narayaneeyam - Dasaka 71 - கேசி வதம், வியோம வதம் (ச்லோகம் 721)

Dasaka 71 - கேசி வதம், வியோம வதம்

தார்க்ஷ்யார்ப்பிதாங்க்ரேஸ்தவ தார்க்ஷ்ய ஏஷ சிசேஷப வக்ஷோபுவி நாம பாதம் ப்ருகோ: பதாகாத கதாம் நிசம்ய ஸ்வநநாபி சக்யம் ததிதீவ மோஹாத் தார்க்ஷ்ய அர்ப்பித அங்க்ரே: தவ தார்க்ஷ்ய ஏஷ சிசேஷப வக்ஷோபுவி நாம பாதம் ப்ருகோ: பத ஆகாத கதாம் நிசம்ய ஸ்வநே அபி சக்யம் தத் இதி இவ மோஹாத் तार्क्ष्यार्पिताङ्घ्रेस्तव तार्क्ष्य एष चिक्षेप वक्षोभुवि नाम पादम् । भृगोः पदाघातकथां निशम्य स्वेनापि शक्यं तदितीव मोहात्

குருவாயூரப்பா! குதிரை வடிவம் கொண்ட அந்த அசுரன் (தார்க்ஷ்யன்), உன்னைப் ப்ருகு முனிவர் தனது கால்களால் உதைத்ததை எண்ணி, தானும் அதே போல் உதைக்க இயலும் என்று சிந்தித்தான். பின்னர் கருடனின் (தார்க்ஷ்யன்) மார்பின் மீது திருப்பாதங்கள் பதித்த உன்னை உனது திருமார்பில் தனது கால்களால் உதைத்தானாமே!