Sriman Narayaneeyam - Dasaka 71 - கேசி வதம், வியோம வதம் (ச்லோகம் 720)
Dasaka 71 - கேசி வதம், வியோம வதம்
கந்தர்வதாமேஷ கதோSபி ரூக்ஷை: நாதை: ஸமுத்வேஜித ஸர்வ லோக: பவந் விலோகாவதி கோபவாடீம் ப்ரமர்த்ய பாப: புநராபதத் த்வாம் கந்தர்வதாம் ஏஷ கத: அபி ரூக்ஷை: நாதை: ஸமுத்வேஜித ஸர்வ லோக: பவந் விலோக அவதி கோபவாடீம் ப்ரமர்த்ய பாப: புந: ஆபதத் த்வாம் गन्धर्वतामेष गतोऽपि रूक्षैर्नादैः समुद्वेजितसर्वलोकः । भवद्विलोकावधि गोपवाटीं प्रमर्द्य पापः पुनरा पतत्त्वाम्
குருவாயூரப்பா! மிகுந்த பாபியாகிய கேசி, உயர்ந்த ஒரு குதிரை வடிவம் கொண்டான். (குதிரை என்பதற்கு கந்தர்வன் என்ற பொருள் உண்டு) அப்படி இருந்தாலும், (கந்தவர்களுக்கு உரிய குணங்கள் எதுவும் இன்றி) தனது அச்சம் விளைவிக்கும் ஓசைகளால் அவன் மக்களை பயம் கொள்ளச் செய்தான். உன்னை அவன் காணும்வரை கோகுலத்தில் உள்ள மக்களைத் துன்புறுத்தினான் அல்லவா?