Sriman Narayaneeyam - Dasaka 71 - கேசி வதம், வியோம வதம் (ச்லோகம் 719)
Dasaka 71 - கேசி வதம், வியோம வதம்
யத்நேஷு ஸர்வேஷ்வபி நாவகேசீ கேசீ ஸ: போஜேசிதுரிஷ்ட பந்து: த்வம் ஸிந்து ஜாவாப்ய இதீவ மத்வா ஸம்ப்ராப்தவாந் ஸிந்துஜ வாஜி ரூப: யத்நேஷு ஸர்வேஷு அபி ந அவகேசீ கேசீ ஸ: போஜ ஈசிது: இஷ்ட பந்து: த்வம் ஸிந்துஜா அவாப்ய இதி இவ மத்வா ஸம்ப்ராப்தவாந் ஸிந்துஜ வாஜி ரூப: यत्नेषु सर्वेष्वपि नावकेशी केशी स भोजेशितुरिष्टबन्धुः । त्वं सिन्धुजाऽवाप्य इतीव मत्वा संप्राप्तवान् सिन्धुजवाजिरूपः
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! போஜ அரசனான கம்சனின் நண்பனாக உள்ளவனும், எடுத்த காரியங்களை இடையூறு எதுவும் இன்றி முடிப்பவனும் ஆகிய கேசி என்பவன் உன்னைப் பற்றி என்ன நினைத்தான்? நீ ஸிந்துவில் (ஸிந்து = கடல்) பிறந்தவளால் (ஸிந்துவில் பிறந்தவள் = கடலில் பிறந்தவள் = மஹாலக்ஷ்மி) எளிதில் அடையக்கூடியவன் என்று நினைத்தான். ஆகவே அவன் ஸிந்துஜ வடிவில் (ஸிந்துஜ = ஸிந்து நாட்டில் தோன்றிய குதிரை) உன்னை அழிக்க வந்தானாமே!விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x, அத்யாயம் 37ன் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.