Sriman Narayaneeyam - Dasaka 70 - சுதர்சன சாப விமோசனம், சங்கசூட அரிஷ்ட வதம் (ச்லோகம் 718)

Dasaka 70 - சுதர்சன சாப விமோசனம், சங்கசூட அரிஷ்ட வதம்

ஓளக்ஷகாணி பரிதாவத தூரம் வீக்ஷ்யதாமயமிஹோக்ஷவிபேதீ இத்தமாத்த ஹஸிதை: ஸஹ கோபை: கோஹகஸ்த்வமவ வாதபுரேச ஓளக்ஷகாணி பரிதாவத தூரம் வீக்ஷ்யதாம் அயம் இஹ உக்ஷவிபேதீ இத்தம் ஆத்த ஹஸிதை: ஸஹ கோபை: கோஹக: த்வம் அவ வாத புர ஈச औक्षकाणि परिधावत दूरं वीक्ष्यतामयमिहोक्षविभेदी । इत्थमात्तहसितैः सह गोपैर्गेहगस्त्वमव वातपुरेश

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இதனைக் கண்ட ஆயர்கள், “காளை மாடுகளே! இங்கு உங்களைக் கொல்பவன் உள்ளான். ஆகவே தூரமாக ஓடி விடுங்கள்”, என்று கிண்டலாகக் கூறினார்கள் அல்லவா? பின்னர் நீ அவர்களுடன் வீட்டிற்குச் சென்றாய். குருவாயூரில் உள்ள ஈசனே! என்னைக் காப்பாற்றுவாயாக!***