Sriman Narayaneeyam - Dasaka 70 - சுதர்சன சாப விமோசனம், சங்கசூட அரிஷ்ட வதம் (ச்லோகம் 716)

Dasaka 70 - சுதர்சன சாப விமோசனம், சங்கசூட அரிஷ்ட வதம்

துங்க ச்ருங்க முகமாச்வபியந்தம் ஸங்க்ருஹய்ய ரபஸாதபியம் தம் பத்ரரூபமபி தைத்யமபத்ரம் மர்தயந்நமதய: ஸுர லோகம் துங்க ச்ருங்க முகம் ஆசு அபியந்தம் ஸங்க்ருஹய்ய ரபஸாத் அபியம் தம் பத்ர ரூபம் அபி தைத்யம் அபத்ரம் மர்தயந் அமதய: ஸுர லோகம் तुङ्गशृङ्गमुखमाश्वभियन्तं ससंगृहय्य रभसादभियं तम् । भद्ररूपमपि दैत्यमभद्रं मर्दयन्नमदयः सुरलोकम्

குருவாயூரப்பா! அவனது முகத்தில் நீளமான கொம்புகள் இருந்தன. அவன் எந்த அச்சமும் இல்லாமல் உன்னை நோக்கி ஓடி வந்தான். நல்ல காளை உருவம் கொண்டிருந்த போதிலும் உள்ளத்தில் தீய எண்ணம் கொண்ட அந்த அசுரனை நீ விரைந்து பிடித்துக் கொன்றாய். இதனைக் கண்டு தேவர்கள் மகிழ்ந்தனர்.