Sriman Narayaneeyam - Dasaka 70 - சுதர்சன சாப விமோசனம், சங்கசூட அரிஷ்ட வதம் (ச்லோகம் 715)
Dasaka 70 - சுதர்சன சாப விமோசனம், சங்கசூட அரிஷ்ட வதம்
சாக்வரோSத ஜகதீ த்ருதி ஹாரீ மூர்த்திமேஷ ப்ருஹதீம் ப்ரததாந: பங்க்திமாசு பரிகூர்ண்ய பசூநாம் சந்தஸாம் நிதிமவாப பவந்தம் சாக்வர: அத ஜகதீ த்ருதி ஹாரீ மூர்த்திம் ஏஷ ப்ருஹதீம் ப்ரததாந: பங்க்திம் ஆசு பரிகூர்ண்ய பசூநாம் சந்தஸாம் நிதிம் அவாப பவந்தம் शाक्वरोऽथ जगतीधृतिहारी मूर्तिमेष बृहतीं प्रदधानः । पङ्क्तिमाशु परिघूर्ण्य पशूनां छन्दसां निधिमवाप भवन्तम्
குருவாயூரப்பா! காளை உருவமாக வந்த அவன், மக்களின் தைரியத்தை அபகரித்தான். தனது உருவத்தைப் பெரிதாக வளர்த்தான். இதன் மூலம் பசுக்கள் அனைத்தையும் விரட்டினான். அதன் பின்னர், வேதமயமான உன்னை நோக்கி விரைவாக ஓடி வந்தானாமே!