Sriman Narayaneeyam - Dasaka 70 - சுதர்சன சாப விமோசனம், சங்கசூட அரிஷ்ட வதம் (ச்லோகம் 714)

Dasaka 70 - சுதர்சன சாப விமோசனம், சங்கசூட அரிஷ்ட வதம்

போஜராஜ ப்ருதகஸ்த்வத கச்சித் கஷ்ட துஷ்ட பத த்ருஷ்டிரரிஷ்ட: நிஷ்டுராக்ருதிரபஷ்டு நிநாத: திஷ்டதே ஸ்ம பவதே வ்ருஷரூபீ போஜராஜ ப்ருதக: து அத கச்சித் கஷ்ட துஷ்ட பத த்ருஷ்டி: அரிஷ்ட: நிஷ்டுர ஆக்ருதி: அபஷ்டு நிநாத: திஷ்டதே ஸ்ம பவதே வ்ருஷரூபீ भोजराजभृतकस्त्वथ कश्चित् कष्टदुष्टपथदृष्टिररिष्टः । निष्ठुराकृतिरपष्ठुनिनादस्तिष्ठते स्म भवते वृषरूपी

குருவாயூரப்பா! போஜ அரசனான கம்சனின் பணியாட்களில் ஒருவன் அரிஷ்டன் என்பவன் ஆவான். அவன் மிகவும் கொடியவன் ஆவான். ஒருமுறை அவன் காளை மாடு போன்ற பயங்கரமான உருவம் கொண்டு, பலமாகக் கத்திக் கொண்டு. உன் எதிரில் வந்து நின்றானாமே!