Sriman Narayaneeyam - Dasaka 70 - சுதர்சன சாப விமோசனம், சங்கசூட அரிஷ்ட வதம் (ச்லோகம் 713)

Dasaka 70 - சுதர்சன சாப விமோசனம், சங்கசூட அரிஷ்ட வதம்

திநேஷு ச ஸுஹ்ருஜ்ஜநைஸ்ஸஹ வநேஷு லீலாபரம் மநோபவ மநோஹரம் ரஸித வேணு நாதாம்ருதம் பவந்தமமரீ த்ருசாமம்ருத பாரணா தாயிநம் விசிந்த்ய கிமு நாலபந் விரஹ தாபிதா கோபிகா: திநேஷு ச ஸுஹ்ருத் ஜநை: ஸஹ வநேஷு லீலாபரம் மநோபவ மநோஹரம் ரஸித வேணு நாத அம்ருதம் பவந்தம் அமரீ த்ருசாம் அம்ருத பாரணா தாயிநம் விசிந்த்ய கிமு ந ஆலபந் விரஹ தாபிதா: கோபிகா: दिनेषु च सुहृज्जनैः सह वनेषु लीलापरं मनोभवमनोहरं रसितवेणुनादामृतम् । भवन्तममरीदृशाममृतपारणादायिनं विचिन्त्य किमु नालपन् विरहतापिता गोपिकाः

குருவாயூரப்பா! நீ பகல் நேரம் முழுவதும் உனது நண்பர்களுடன் காட்டில் விளையாடி மகிழ்ந்தாய். மன்மதனைப் போல் அனைவரையும் உனது அழகால் ஈர்த்தாய். இனிமையான புல்லாங்குழல் ஓசையை எழுப்பினாய். உன்னைக் கண்ட பெண்கள் அமிர்தம் பருகியதாகவே உணர்ந்தனர். அந்தப் பெண்கள் உனது பிரிவைத் தாங்க முடியாமல் விரகதாபத்தில் துடித்தனர். உன்னை நினைத்து எதைத்தான் அவர்கள் கூறவில்லை?