Sriman Narayaneeyam - Dasaka 70 - சுதர்சன சாப விமோசனம், சங்கசூட அரிஷ்ட வதம் (ச்லோகம் 712)
Dasaka 70 - சுதர்சன சாப விமோசனம், சங்கசூட அரிஷ்ட வதம்
கதாபி கலு ஸீரிணா விஹரதி த்வயி ஸ்த்ரீ ஜநை: ஜஹார தநதாநுக: ஸ கில சங்கசூடோSபலா: அதித்ருதமநுத்ருதஸ்தமத முக்த நாரீ ஜநம் ருரோஜித சிரோமணிம் ஹலப்ருதே ச தஸ்யாதத: கதா அபி கலு ஸீரிணா விஹரதி த்வயி ஸ்த்ரீ ஜநை: ஜஹார தநத அநுக: ஸ கில சங்கசூட: அபலா: அதித்ருதம் அநுத்ருத: தம் அத முக்த நாரீ ஜநம் ருரோஜித சிரோமணிம் ஹலப்ருதே ச தஸ்ய அதத: कदापि खलु सीरिणा विहरति त्वयि स्त्रीजनै - र्जहार्धनदानुगः स किल शङ्खचूडोऽबलाः । अतिद्रुतमनुद्रुतस्तमथ मुक्तनारीजनं रुरोजिथ शिरोमणिं हलभृते च तस्याददाः
குருவாயூரப்பா! ஒருநாள் நீ பலராமனோடும் ஆயர் பெண்களுடனும் விளையாடிக் கொண்டிருந்தாய். அப்போது, குபேரனின் வேலையாட்களில் ஒருவனான சங்கசூடன் என்பவன், அந்தப் பெண்களைத் தூக்கிச் சென்றான். நீ உடனே அவனைத் தூரத்திச் சென்று, அவனைக் கொன்றாய். அவன் தலையில் இருந்து உயர்ந்த இரத்தினக் கல்லை பலராமனுக்குப் பரிசாக அளித்தாய் அல்லவா?