Sriman Narayaneeyam - Dasaka 70 - சுதர்சன சாப விமோசனம், சங்கசூட அரிஷ்ட வதம் (ச்லோகம் 711)
Dasaka 70 - சுதர்சன சாப விமோசனம், சங்கசூட அரிஷ்ட வதம்
ஸுதர்சநதர ப்ரபோ நநு ஸுதர்சநாக்யோSஸ்ம்யஹம் முநீந் க்வசிதபாஹஸம் த இஹ மாம் வ்யதுர்வாஹஸம் பவத் பத ஸமர்பணாதமலதாம் கதோSஸ்மீத்யஸௌ ஸ்துவந் நிஜபதம் யயௌ வ்ரஜபதம் ச கோபா முதா ஸுதர்சநதர ப்ரபோ நநு ஸுதர்சந ஆக்ய: அஸ்மி அஹம் முநீந் க்வசித் உபாஹஸம் த இஹ மாம் வ்யது: வாஹஸம் பவத் பத ஸமர்பணாத் அமலதாம் கத: அஸ்மி இதி அஸௌ ஸ்துவந் நிஜபதம் யயௌ வ்ரஜபதம் ச கோபா முதா सुदर्शनधर प्रभो ननु सुदर्शनाख्योऽस्म्यहं मुनीन् क्वचिदपाहसं त इह मां व्यधुर्वाहसम् । भवत्पदसमर्पणादमलतां गतोऽस्मीत्यसौ स्तुवन् निजपदं ययौ व्रजपदं च गोपा मुदा
குருவாயூரப்பா! அந்த வித்யாதரன் உன்னிடம், “க்ருஷ்ணா! சுதர்சன சக்கரத்தைக் கைகளில் உள்ளவனே! ப்ரபுவே! எனது பெயர் சுதர்சனன் ஆகும். ஒருமுறை நான் சில முனிவர்களைப் பார்த்துக் கேலி செய்தேன். அவர்கள் என்னை மலைப்பாம்பாக மாறும்படி சபித்தனர். ஆனால் இன்று உனது தூய்மையான திருப்பாதம் பட்டதால், எனது சாபம் நீங்கி தூய்மையாக ஆனேன்”, என்றான். பின்னர் தனது இடத்திற்குச் சென்றான். ஆயர்களும் வ்ரஜ பூமிக்குத் திரும்பினர்.