Sriman Narayaneeyam - Dasaka 70 - சுதர்சன சாப விமோசனம், சங்கசூட அரிஷ்ட வதம் (ச்லோகம் 710)

Dasaka 70 - சுதர்சன சாப விமோசனம், சங்கசூட அரிஷ்ட வதம்

ஸமுந்முகமதோல்முகைரபிஹதேSபி தஸ்மிந் பலாத் அமுஞ்சதி பவத் பதே ந்யபதி பாஹி பாஹீதி தை: ததா கலு பதா பவாந் ஸமுகபகம்ய பஸ்பர்ச தம் பபௌ ஸ ச நிஜாம் தநும் ஸமுபஸாத்ய வைத்யாதரீம் ஸமுந்முகம் அத உல்முகை: அபிஹதே அபி தஸ்மிந் பலாத் அமுஞ்சதி பவத் பதே ந்யபதி பாஹி பாஹி இதி தை: ததா கலு பதா பவாந் ஸமுகபகம்ய பஸ்பர்ச தம் பபௌ ஸ ச நிஜாம் தநும் ஸமுபஸாத்ய வைத்யாதரீம் समुन्मुखमथोन्मुकैरभिहतेऽपि तस्मिन् बलादमुञ्चति भवत्पदे न्यपति पाहि पाहीति तैः । तदा खलु पदा भवान्समुपगम्य पस्पर्श तं बभौ स च निजां तनुं समुपसाद्य वैद्याधरीम्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இதனைக் கண்ட ஆயர்கள் கொள்ளிக் கட்டைகள் கொண்டு அந்தப் பாம்பை அடித்தனர். ஆயினும் அது நந்தகோபரை விடவில்லை. உடனே அவர்கள் உனது கால்களில் விழுந்து, “காப்பாற்று காப்பாற்று”, என்று கூறினர். நீ விரைவாக வந்து அந்தப் பாம்பின் உடலை உனது அழகான திருப்பாதங்களால் தொட்டாய் அல்லவா? உடனே அந்தப் பாம்பு தனது சாபம் நீங்கப் பெற்று தனது முந்தைய வித்யாதர உருவத்தை மீண்டும் பெற்றதாமே!