Sriman Narayaneeyam - Dasaka 70 - சுதர்சன சாப விமோசனம், சங்கசூட அரிஷ்ட வதம் (ச்லோகம் 709)

Dasaka 70 - சுதர்சன சாப விமோசனம், சங்கசூட அரிஷ்ட வதம்

இதி த்வயி ரஸாகுலம் ரமித வல்லபே வல்லவா: கதாபி புரமம்பிகா கமிதுரம்பிகா காநநே ஸமேத்ய பவதா ஸமம் நிசி நிவேஷ்ய திவ்யோத்ஸவம் ஸுகம் ஸுஷுபுரக்ரஸீத் வ்ரஜபமுக்ரநாகஸ்ததா இதி த்வயி ரஸ ஆகுலம் ரமித வல்லபே வல்லவா: கதா அபி புரம் அம்பிகா கமிது: அம்பிகா காநநே ஸமேத்ய பவதா ஸமம் நிசி நிவேஷ்ய திவ்ய உத்ஸவம் ஸுகம் ஸுஷுபு அக்ரஸீத் வ்ரஜபம் உக்ரநாக: ததா इति त्वयि रसाकुलं रमितवल्लभे वल्लवाः कदापि पुनरम्बिकाकमितुरम्बिकाकानने । समेत्य भवता समं निशि निषेव्य दिव्योत्सवं सुखं सुषुवुरग्रसीद्व्रजपमुग्रनागस्तदा

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இப்படியாக நீ ராஸக்ரீடை மூலம் கோபிகைகளுக்குப் பரமானந்தத்தை அளித்தாய். ஒருநாள், அம்பிகா என்ற வனத்தில் இருந்த சிவன் கோயிலுக்கு ஆயர்கள் அனைவரும் சென்றனர். அங்கு நடந்த உத்சவத்தைக் கண்டு மகிழ்ந்தனர். அங்கு அன்று இரவு தங்கினர். அப்போது ஒரு பெரிய மலைப்பாம்பு நந்தகோபரை விழுங்கியது அல்லவா?விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x, அத்யாயங்கள் 34, 35 மற்றும் 36 ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.