Sriman Narayaneeyam - Dasaka 69 - ராஸ க்ரீடை - 5 (ச்லோகம் 708)

Dasaka 69 - ராஸ க்ரீடை - 5

காமிநீரிதி ஹி பாமிநீஷு கலு காமநீயகநிதே பவாந் பூர்ண ஸம்மத ரஸார்ணவம் கமபி யோகி கம்யமநுபாவயந் ப்ரஹ்ம சங்கர முகாநபீஹ பசுபாங்கநாஸு பஹுமாநயந் பக்த லோக கமநீய ரூப கமநீய க்ருஷ்ண பரிபாஹி மாம் காமிநீ: இதி ஹி பாமிநீஷு கலு காமநீயகநிதே பவாந் பூர்ண ஸம்மத ரஸ அர்ணவம் கம் அபி யோகி கம்யம் அநுபாவயந் ப்ரஹ்ம சங்கர முகாந் அபி இஹ பசுப அங்கநாஸு பஹுமாநயந் பக்த லோக கமநீய ரூப கமநீய க்ருஷ்ண பரிபாஹி மாம் कामिनीरिति हि यामिनीषु खलु कामनीयकनिधे भवान् पूर्णसम्मदरसार्णवं कमपि योगिगम्यमनुभावयन् । ब्रह्मशङ्करमुखानपीह पशुपाङ्गनासु बहुमानयन् भक्तलोकगमनीयरूप कमनीय कृष्ण परिपाहि माम्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! பகவானே! அழகானவனே! யோகிகளால் மட்டுமே அடையக்கூடிய பரமானந்த நிலையை நீ இப்படியாக அந்தக் கோபிகைகளுக்குக் கொடுத்து, அவர்களை மகிழ்ச்சி என்னும் கடலில் மூழ்கச் செய்தாய். இதனால்தானே அந்தக் கோபிகைகளை சிவனும் நான்முகனும் போற்றுகின்றனர். உன்னுடைய ஆத்மார்த்தமான பக்தர்களால் மட்டுமே இப்படி உன்னை அனுபவிக்க இயலும். அப்படிப்பட்ட க்ருஷ்ணா! பகவானே! குருவாயூரப்பா! எனது பிணிகளை நீக்கி என்னைக் காப்பாற்ற வேண்டும்.***