Sriman Narayaneeyam - Dasaka 69 - ராஸ க்ரீடை - 5 (ச்லோகம் 707)

Dasaka 69 - ராஸ க்ரீடை - 5

கேளி பேத பரிலோலிதாபி: அதிலாலிதாபிரபலாலிபி: ஸ்வைரமீச நநு ஸுரஜா பயஸி சாரு நாம விஹ்ருதிம் வ்யதா: காநநேSபி ச விஸாரி சீதள கிசோர மாருத மநோஹரே ஸூர ஸௌரபமயே விலேஸித விலாஸிநீ சத விமோஹதம் கேளி பேத பரிலோலிதாபி: அதி லாலிதாபி: அபலாலிபி: ஸ்வைரம் ஈச நநு ஸுரஜா பயஸி சாரு நாம விஹ்ருதிம் வ்யதா: காநநே அபி ச விஸாரி சீதள கிசோர மாருத மநோஹரே ஸூர ஸௌரபமயே விலேஸித விலாஸிநீ சத விமோஹதம் केळिभेदपरिलोलिताभिरतिलालिताभिरबलाळिभिः स्वैरमीश ननु सूरजापयसि चारु नाम विहृतिं व्यधाः । काननेऽपि च विसारिशीतलकिशोरमारुतमनोहरे सूनसौरभमये विलेसिथ विलासिनीशतविमोहनम्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அதன் பின்னர் நீ அவர்களுடன் பலவிதமான இன்ப லீலைகளில் ஈடுபட்டாய். இதனால் அவர்கள் மிகவும் சோர்ந்தனர். அதன் பின்னர் அவர்களுடன் இணைந்து நீ யமுனை நதியில் ஜலக்ரீடை செய்தாய் அல்லவா? அந்த நேரம் குளிர்ந்த காற்று இதமாக வீசியது. அந்தக் காற்றில் மலர்களின் நறுமணம் இதமாகப் பரவியது. இதனால் அந்த நதிக்கரை மிகவும் அழகுடன் விளங்கியது. இந்த நிலையில் நீ அந்தப் பெண்களை மேலும் மயக்கும்படி செய்தாயாமே!