Sriman Narayaneeyam - Dasaka 69 - ராஸ க்ரீடை - 5 (ச்லோகம் 706)

Dasaka 69 - ராஸ க்ரீடை - 5

மோதஸீமநி புவநம் விலாப்ய விஹ்ருதிம் ஸமாப்ய ச ததோ விபோ கேளி ஸம்ம்ருதித நிர்மலாங்க நவ கர்ம லேச ஸுபகாத்மநாம் மந்மதாஸஹந சேதஸாம் பசுப யோஷிதாம் ஸுக்ருத சோதித: தாவதாகலித மூர்த்திராததித மார வீர பரமோத்ஸவாந் மோதஸீமநி புவநம் விலாப்ய விஹ்ருதிம் ஸமாப்ய ச தத: விபோ கேளி ஸம்ம்ருதித நிர்மல அங்க நவ கர்ம லேச ஸுபக ஆத்மநாம் மந்மத அஸஹந சேதஸாம் பசுப யோஷிதாம் ஸுக்ருத சோதித: தாவத் ஆகலித மூர்த்தி: அததித மார வீர பரம உத்ஸவாந் मोदसीम्नि भुवनं विलाप्य विहृतिं समाप्य च ततो विभो केलिसम्मृदितनिर्मलाङ्गनवघर्मलेशसुभगात्मनाम् । मन्मथासहनचेतसां पशुपयोषितां सुकृतचोदित - स्तावदाकलितमूर्तिरादधिथ मारवीरपरमोत्सवान्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! எங்கும் உள்ளவனே! இந்த ராஸக்ரீடை மூலமாக உலகம் முழுவதும் பேரானந்தத்தில் மூழ்கும்படிச்செய்து விட்டு இந்த விளையாட்டை முடித்தாய். அந்தப் பெண்களின் மாசற்ற உடலில் உள்ள அவயங்கள் எங்கும் வியர்வை முத்து முத்தாக இருந்தது. இதனால் அவர்கள் மேலும் அழகாக விளங்கினார்கள். அவர்களால் மேலும் காதலைப் பொறுக்க முடியாமல் உனது மனதைக் கவர்ந்தனர். அவர்களின் தூய்மையான மனதாலும், புண்ணியத்தாலும், எத்தனை கோபிகைகள் இருந்தனரோ, அத்தனை க்ருஷ்ணனாக நீ பல உருவம் எடுத்தாய். அப்படி எடுத்து அந்த மன்மத நிகழ்வை நடத்தினாய் அல்லவா?