Sriman Narayaneeyam - Dasaka 69 - ராஸ க்ரீடை - 5 (ச்லோகம் 705)

Dasaka 69 - ராஸ க்ரீடை - 5

காநமீச விரதம் க்ரமேண கில வாத்ய மேளநமுபாரதம் ப்ரஹ்ம ஸம்மத ரஸாகுலா: ஸதஸி கேவலம் நந்ருதுரங்கநா: நாவிதந்நபி ச நீவிகாம் கிமபி குந்தலீமபி ச கஞ்சுலீம் ஜ்யோதிஷாமபி கதம்பகம் திவி விலம்பிதம் கிமபரம் ப்ருவே காநம் ஈச விரதம் க்ரமேண கில வாத்ய மேளநம் உபாரதம் ப்ரஹ்ம ஸம்மத ரஸ ஆகுலா: ஸதஸி கேவலம் நந்ருது: அங்கநா: ந அவிதந் அபி ச நீவிகாம் கிமபி குந்தலீம் அபி ச கஞ்சுலீம் ஜ்யோதிஷாம் அபி கதம்பகம் திவி விலம்பிதம் கிம் அபரம் ப்ருவே गानमीश विरतं क्रमेण किल वाद्यमेळनमुपारतं ब्रह्मसम्मदरसाकुलाः सदसि केवलं ननृतुरङ्गनाः । नाविदन्नपि च नीविकां किमपि कुन्तलीमपि च कञ्चुलीं ज्योतिषामपि कदम्बकं दिवि विलम्बितं किमपरं ब्रुवे

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஈசனே! இனிமையான பாட்டுக்கள், வாத்திய ஒலிகள் ஆகியவை படிப்படியாகக் குறைந்து ஓய்ந்தன. அப்போது அந்தப் பெண்கள் மிகுந்த பரவச நிலையில், பேரானந்த நிலையில் இருந்தனர். அத்துடன் ஆடிக் கொண்டிருந்தனர். அந்த நிலையில் தங்கள் கூந்தல், ரவிக்கை, உடை முதலானவை அவிழ்ந்து விழுந்ததைக் கூட உணரவில்லை. இப்படி ஓர் அற்புதமான நிலையைக் கண்டு வானில் உள்ள நட்சத்திரங்கள் அப்படியே திகைத்து நின்று விட்டதாகத் தோன்றியது. நான் வேறு எப்படி வர்ணிப்பது?