Sriman Narayaneeyam - Dasaka 69 - ராஸ க்ரீடை - 5 (ச்லோகம் 704)
Dasaka 69 - ராஸ க்ரீடை - 5
காபி கண்டபுவி ஸந்நிதாய நிஜ கண்டம் ஆகுலித குண்டலம் புண்ய பூர நிதிரந்வவாப தவ பூக சர்வித ரஸாம்ருதம் இந்திரா விஹ்ருதி மந்திரம் புவந ஸுந்தரம் ஹி நடநாந்தரே த்வாமவாப்ய ததுரங்கநா: கிமு ந ஸம்மதோந்மத தசாந்தரம் காபி கண்டபுவி ஸந்நிதாய நிஜ கண்டம் ஆகுலித குண்டலம் புண்ய பூர நிதி: அந்வவாப தவ பூக சர்வித ரஸ அம்ருதம் இந்திரா விஹ்ருதி மந்திரம் புவந ஸுந்தரம் ஹி நடந அந்தரே த்வாம் அவாப்ய தது: அங்கநா: கிமு ந ஸம்மத உந்மத தசாந்தரம் कापि गण्डभुवि सन्निधाय निजगण्डमाकुलितकुण्डलं पुण्यपूरनिधिरन्ववाप तव पूगचर्वितरसामृतम् । इन्दिराविहृतिमन्दिरं भुवनसुन्दरं हि नटनान्तरे त्वामवाप्य दधुरङ्गनाः किमु न सम्मदोन्मददशान्तरम्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்தக் கோபிகைகளில் ஒருத்தி, குண்டலங்கள் அசைகின்ற உனது அழகிய கன்னத்தின் மீது தனது கன்னத்தைப் பதிய வைத்துக்கொண்டாள். எத்தகைய புண்ணியம் செய்தவள் அவள்! மேலும் அவள், நீ வாயில் மென்று கொண்டிருந்த வெற்றிலைச் சாற்றை அமிர்தம் என்று பருகினாள் அல்லவா? மஹாலக்ஷ்மி விளையாடும் இடமாகவும், மூன்று உலகங்களிலும் மிகவும் அழகானதும் ஆகிய உனது திருமேனியில் சாய்ந்து, அதன் மூலம் அந்த கோபிகைகள் அடைந்த பேரானந்தம் என்னே! அவர்கள் இதன் மூலம் எந்த இன்பத்தைத்தான் அனுபவிக்கவில்லை?