Sriman Narayaneeyam - Dasaka 69 - ராஸ க்ரீடை - 5 (ச்லோகம் 703)

Dasaka 69 - ராஸ க்ரீடை - 5

ஸ்விந்ந ஸந்ந தநு வல்லரீ ததநு காபி நாம பசுபாங்கநா காந்தமம்ஸமவலம்பதே ஸ்ம தவ தாந்தி பார முகுலேக்ஷணா காசிதாசலித குந்தலா நவ படீர ஸார கந ஸௌரபம் வஞ்சநேந தவ ஸஞ்சுசும்ப புஜம் அஞ்சிதோரு புலகாங்குரம் ஸ்விந்ந ஸந்ந தநு வல்லரீ ததநு காபி நாம பசுப அங்கநா காந்தம் அம்ஸம் அவலம்பதே ஸ்ம தவ தாந்தி பார முகுல ஈக்ஷணா காசித் ஆசலித குந்தலா நவ படீர ஸார கந ஸௌரபம் வஞ்சநேந தவ ஸஞ்சுசும்ப புஜம் அஞ்சித உரு புலக அங்குரம் स्विन्नसन्नतनुवल्लरी तदनु कापि नाम पशुपाङ्गना कान्तमंसमवलम्बते स्म तव तान्तिभारमुकुलेक्षणा । काचिदाचलितकुन्तळा नवपटीरसारनवसौरभं वञ्चनेन तव सञ्चुचुम्ब भुजमञ्चितोरुपुळकाङ्कुरम्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்த நேரம் ஒரு கோபிகை மிகவும் வியர்த்துக் களைப்படைந்தாள். அதனால் தனது அழகிய கண்களை மூடிக்கொண்டு, தனது கொடி போன்ற உடலுடன் உனது இனிய திருமேனி மீது சாய்ந்தாள். மேலும் ஒரு பெண் தனது கூந்தல் முழுவதும் அவிழ்ந்தவளாக, சந்தனம் மணம் வீசும் உனது திருக்கரங்களை எடுத்து, அதனை முகர்ந்தாள். அதனால் மேலும் ஆனந்தம் அடைந்து அந்தத் திருக்கரங்களை நன்றாக முத்தம் இட்டாள்.