Sriman Narayaneeyam - Dasaka 69 - ராஸ க்ரீடை - 5 (ச்லோகம் 702)

Dasaka 69 - ராஸ க்ரீடை - 5

ச்ரத்தயா விரசிதாநுகாந க்ருத தார தார மதுர ஸ்வரே நர்த்தநேSத லலிதாங்கஹார லுலித அங்கஹார மணி பூஷணே ஸம்மதேந க்ருத புஷ்ப வர்ஷமலம் உந்மிஷத் திவிஷதாம் குலம் சிந்மயே த்வயி நிலீயமாநமிவ ஸம்முமோஹ ஸவதூகுலம் ச்ரத்தயா விரசித அநுகாந க்ருத தார தார மதுர ஸ்வரே நர்த்தநே அத லலித அங்க ஹார லுலித அங்க ஹார மணி பூஷணே ஸம்மதேந க்ருத புஷ்ப வர்ஷம் அலம் உந்மிஷத் திவிஷதாம் குலம் சிந்மயே த்வயி நிலீயமாநம் இவ ஸம்முமோஹ ஸவதூகுலம் श्रद्धया विरचितानुगानकृततारतारमधुरस्वरे नर्तनेऽथ ललिताङ्गहारलुळिताङ्गहारमणिभूषणे । सम्मदेन कृतपुष्पवर्षमलमुन्मिषद्दिविषदां कुलं चिन्मये त्वयि निलीयमानमिव संमुमोह सवधूकुलम्

க்ருஷ்ணா குருவாயூரப்பா! அந்த நாட்டியத்திற்கு ஏற்ப பின்பாட்டு மிகவும் இனிமையாகப் பாடப்பட்டது. இதனால் இனிமையான ஸ்வரங்கள் ஒலித்தன. நடனம் ஆடும்போது உண்டாகும் அசைவினால் முத்து மாலைகள், ரத்ன ஆபரணங்கள் அசைந்தன. இதனைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்த தேவர்கள் தங்கள் மனைவிமார்களுடன் இணைந்து அந்த இடத்தின் மீது மலர்களைத் தூவினர். அவர்கள் கூட்டம் முழுவதும் உன் மீது அப்படியே ஒன்றி விட்டது.