Sriman Narayaneeyam - Dasaka 69 - ராஸ க்ரீடை - 5 (ச்லோகம் 701)

Dasaka 69 - ராஸ க்ரீடை - 5

வேணு நாத க்ருத தாந தாந கல காந ராக கதி யோஜநா லோபநீய ம்ருது பாத பாத க்ருத தால மேளந மநோஹரம் பாணி ஸங்க்வணித கங்கணம் ச முஹு: அம்ஸ லம்பித கராம்புஜம் ச்ரோணி பிம்ப சலதம்பரம் பஜத ரஸ கேளி ரஸ டம்பரம் வேணு நாத க்ருத தாந தாந கல காந ராக கதி யோஜநா லோபநீய ம்ருது பாத பாத க்ருத தால மேளந மநோஹரம் பாணி ஸங்க்வணித கங்கணம் ச முஹு: அம்ஸ லம்பித கர அம்புஜம் ச்ரோணி பிம்ப சலத் அம்பரம் பஜத ரஸ கேளி ரஸ டம்பரம் वेणुनादकृततानदानकलगानरागगतियोजना - लोभनीयमृदुपादपातकृततालमेलनमनोहरम् । पाणिसंक्वणितकङ्कणं च मुहुरंसलम्बितकराम्बुजं श्रोणिबिम्बचलदम्बरं भजत रासकेळिरसडम्बरम्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இனிமையான புல்லாங்குழலின் ஒலியுடன் இணைந்தால் பாட்டின் ராகங்கள் இனிமையாக இருந்தன. அழகான மென்மையான பாதங்கள் அனைத்தும் ஒன்றாக வைத்து ஆடுவதால் தாளம் இனிமையாக இருந்தது. அந்தப் பெண்கள் கைகளில் அணிந்திருந்த வளையல் ஒலிகள் சுகமாக இசைத்தன. தாமரை போன்ற கைகளை அடிக்கடி தோளில் வைப்பதும் இறக்குவதுமாக நாட்டியம் காணப்பட்டது. இடுப்பில் உள்ள ஆடைகள் தானாகவே அழகாக அசைந்தன. இப்படி காண்பதற்கு இன்பம் விளைவிக்கும் ராஸக்ரீடையை நீங்கள் த்யானம் செய்து மகிழுங்கள் (என்று பட்டத்ரி நம்மிடம் கூறுகிறார்).