Sriman Narayaneeyam - Dasaka 69 - ராஸ க்ரீடை - 5 (ச்லோகம் 700)

Dasaka 69 - ராஸ க்ரீடை - 5

வாஸுதேவ தவ பாஸமாநமிஹ ராஸகேளி ரஸ ஸௌரபம் தூரதோSபி கலு நாரதாகதிதம் ஆகலய்ய குதுகாகுலா வேஷ பூஷண விலாஸ பேசல விலாஸிநீ சத ஸமாவ்ருதா நாகதோ யுகபதாகதா வியதி வேகத: அத ஸுர மண்டலீ வாஸுதேவ தவ பாஸமாநம் இஹ ராஸ கேளி ரஸ ஸௌரபம் தூரத: அபி கலு நாரத ஆகதிதம் ஆகலய்ய குதுக ஆகுலா வேஷ பூஷண விலாஸ பேசல விலாஸிநீ சத ஸமாவ்ருதா நாகத: யுகபத் ஆகதா வியதி வேகத: அத ஸுர மண்டலீ वासुदेव तव भासमानमिह रासकेळिरससौरभं दूरतोऽपि खलु नारदागदितमाकलय्य कुतुकाकुलाः । वेषभूषणविलासपेशलविलासिनीशतसमावृता नाकतो युगपदागता वियति वेगतोऽथ सुरमण्डली

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! வாஸுதேவா! இதனைக் கண்ட நாரதர், “க்ருஷ்ணனின் ராஸக்ரீடையால் யமுனையின் கரை ப்ரகாசமாக உள்ளது”, என்றார். நாரதர் இப்படிக் கூறியதைக் கேட்ட தேவர்கள் மகிழ்ந்தனர். அவர்கள் அனைவரும் பலவிதமான ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டு, தங்கள் தேவலோகப் பெண்களுடன் ஆகாய மார்க்கமாக அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.