Sriman Narayaneeyam - Dasaka 69 - ராஸ க்ரீடை - 5 (ச்லோகம் 698)

Dasaka 69 - ராஸ க்ரீடை - 5

கேச பாத த்ருத பிஞ்சிகா விததி ஸஞ்சலந் மகர குண்டலம் ஹார ஜால வநமாலிகா லலிதம் அங்கராக கந ஸௌரபம் பீத சேல த்ருத காஞ்சி காஞ்சிதம் உதஞ்சதம்சு மணி நூபுரம் ராஸ கேளி பரிபூஷிதம் தவ ஹி ரூபமீச கலயாமஹே கேச பாத த்ருத பிஞ்சிகா விததி ஸஞ்சலந் மகர குண்டலம் ஹார ஜால வநமாலிகா லலிதம் அங்க ராக கந ஸௌரபம் பீத சேல த்ருத காஞ்சி காஞ்சிதம் உதஞ்சத் அம்சு மணி நூபுரம் ராஸ கேளி பரிபூஷிதம் தவ ஹி ரூபம் ஈச கலயாமஹே केशपाशधृतपिञ्छिकावितति सञ्चलन्मकरकुण्डलं हारजालवनमालिकाललितमङ्गरागघनसौरभम् । पीतचेलधृतकाञ्चिकाञ्चितमुदञ्चदंशुमणिनूपुरं रासकेलिपरिभूषितं तव हि रूपमीश कलयामहे

ஈசனே! க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ அந்த ராஸக்ரீடை நிகழ்வுக்காக நன்கு அலங்கரித்துக் காணப்பட்டாய். உனது தலையில் இருந்த கொண்டையில் மயில் பீலிகள் அழகாக சொருகப்பட்டிருந்தன. காதுகளில் மகர குண்டலங்கள் அழகாக அசைந்தன. உனது திருமார்பில் பூசப்பட்டிருந்த சந்தனம் நறுமணம் வீசியது. உனது இடுப்பில் அழகான பட்டுப் பீதாம்பரமும், அதன் மேல் ஒட்டியாணமும் காணப்பட்டது. உன்னுடைய அழகிய கால்களில் இரத்தினக் கற்கள் பதித்த தண்டைகள் ஒளி வீசின. இப்படிப்பட்ட எழில் பொங்கும் உனது அழகை, உருவத்தை நான் த்யானம் செய்கிறேன்.விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x, அத்யாயம் 33ன் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.