Sriman Narayaneeyam - Dasaka 68 - ராஸ க்ரீடை - 4 (ச்லோகம் 693)
Dasaka 68 - ராஸ க்ரீடை - 4
இதி முதாSSகுலைர் வல்லவீ ஜநை: ஸமமுபாகதோ யாமுநே தடே ம்ருது குசாம்பரை: கல்பிதாஸநே குஸ்ருண பாஸுரே பர்யசோபதா: இதி முதாகுலை: (க்ருஷ்ணா) வல்லவீ ஜநை: ஸமம் உபாகத: (க்ருஷ்ணா) யாமுநே தடே ம்ருது குச அம்பரை: (க்ருஷ்ணா) கல்பித ஆஸநே குஸ்ருண பாஸுரே (க்ருஷ்ணா) பர்யசோபதா: इति मुदाकुलैर्वल्लवीजनैः सममुपागतो यामुने तटे । मृदुकुचाम्बरैः कल्पितासने घुसृणभासुरे पर्यशोभथाः
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இப்படியாக பல கோபிகைகள் பலவிதமாக ஆனந்தம் அடைந்தனர். நீ அனைவருடனும் யமுனை நதியின் கரைக்கு வந்தாய். மென்மையான, குங்குமம், மஞ்சள் படிந்த தங்கள் மேல் ஆடைகளால் நீ அமர்வதற்கான இருக்கை ஒன்று செய்தனர். அந்த இருக்கையில் நீ அழகாக விளங்கினாய் அல்லவா?