Sriman Narayaneeyam - Dasaka 68 - ராஸ க்ரீடை - 4 (ச்லோகம் 689)
Dasaka 68 - ராஸ க்ரீடை - 4
ததநு காசந த்வத் கராம்புஜம் ஸபதி க்ருஹ்ணதீ நிர்விசங்கிதம் கந பயோதரே ஸம்விதாய ஸா புலக ஸம்வ்ருதா தஸ்துஷீ சிரம் ததநு காசந (க்ருஷ்ணா) த்வத் கர அம்புஜம் ஸபதி க்ருஹ்ணதீ (க்ருஷ்ணா) நிர்விசங்கிதம் கந பயோதரே (க்ருஷ்ணா) ஸம்விதாய ஸா புலக ஸம்வ்ருதா (க்ருஷ்ணா) தஸ்துஷீ சிரம் तदनु काचन त्वत्कराम्बुजं सपदि गृह्णती निर्विशङ्कितम् । घनपयोधरे संविधाय सा पुलकसंवृता तस्थुषी चिरम्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! சற்று நேரம் கழிந்தது. அப்போது ஒரு கோபிகை சிறிதும் தயக்கம் இல்லாமல் உனது தாமரை மலர் போன்று சிவந்த அழகிய கைகளை பிடித்துக் கொண்டாள். அதனை மெல்ல எடுத்து தனது பெரிய ஸ்தனங்களின் மீது வைத்துக்கொண்டாள். உடல் எங்கும் சிலிர்க்கத் தன்னை மறந்து நின்றாள் அல்லவா?