Sriman Narayaneeyam - Dasaka 68 - ராஸ க்ரீடை - 4 (ச்லோகம் 688)

Dasaka 68 - ராஸ க்ரீடை - 4

தவ விலோகநாத் கோபிகா ஜநா: ப்ரமத ஸங்குலா: பங்கஜேக்ஷணா அம்ருத தாரயா ஸம்ப்லுதா இவ ஸ்திமிததாம் ததுஸ்த்வத் புரோகதா: தவ விலோகநாத் (க்ருஷ்ணா) கோபிகா ஜநா: ப்ரமத ஸங்குலா: (க்ருஷ்ணா) பங்கஜ ஈக்ஷணா அம்ருத தாரயா (க்ருஷ்ணா) ஸம்ப்லுதா இவ ஸ்திமிததாம் தது: (க்ருஷ்ணா) த்வத் புரோ கதா: तव विलोकनाद्गोपिकाजनाः प्रमदसंकुलाः पङ्कजेक्षण । अमृतधारया संप्लुता इव स्तिमिततां दधुस्त्वत्पुरोगताः

(இந்த தசகத்தில் உள்ள அனைத்து ச்லோகங்களிலும் அடைப்புக்குறிக்குள் க்ருஷ்ணா என்ற பதம் உள்ளது. நாராயணபட்டத்ரி தமது மூலத்தில் இப்படி எழுதவில்லை. இருந்தாலும் ஸ்ரீமத்பாகவதத்தை ஒட்டி இந்த முறையில் பாடம் செய்யப்படுகிறது). க்ருஷ்ணா! குருவாயூரப்பா! தாமரை போன்ற மலர்ந்த அழகான கண்களை உடையவனே! மீண்டும் உன்னைக் கண்ட கோபிகைகள் மிகவும் மகிழ்ந்தனர். ஆனந்தக் கண்ணீர் பெருக. அமிர்தத்தால் குளித்ததுபோல் பேரானந்தத்தில் மூழ்கினர். உனது முன்னால் என்ன செய்வது என்று அறியாது அப்படியே அசைவில்லாமல் நின்றனர் அல்லவா?விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x, அத்யாயம் 32ன் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.