Sriman Narayaneeyam - Dasaka 67 - ராஸ க்ரீடை - 3 (ச்லோகம் 685)

Dasaka 67 - ராஸ க்ரீடை - 3

தத: ஸமம் தா விபிநே ஸமந்தாத் தமோவதாராவதி மார்க்யந்த்ய: புநர் விமிச்ரா யமுநா தடாந்தே ப்ருசம் விலேபுச்ச ஜகுர் குணாம்ஸ்தே தத: ஸமம் தா: விபிநே ஸமந்தாத் தமோவதார அவதி மார்க்யந்த்ய: புந: விமிச்ரா யமுநா தட அந்தே ப்ருசம் விலேபு: ச ஜகு: குணாந் தே ततः समं ता विपिने समन्तात्तमोवतारावधि मार्गयन्त्यः । पुनर्विमिश्रा यमुनातटान्ते भृशं विलेपुश्च जगुर्गुणांस्ते

குருவாயூரப்பா! அவர்கள் அனைவரும் ராதையுடன் சேர்ந்து கொண்டு நன்றாக இருட்டும்வரை அந்தக் காட்டில் உன்னைத் தேடினார்கள். மீண்டும் யமுனையில் கரையில் ஒன்று சேர்ந்தனர். உன்னைக் காணாமல் அழுதவர்களாக, உனது லீலைகளைப் புகழந்தவர்களாகப் பாடினர்.