Sriman Narayaneeyam - Dasaka 67 - ராஸ க்ரீடை - 3 (ச்லோகம் 684)

Dasaka 67 - ராஸ க்ரீடை - 3

த்வதாத்மிகாஸ்தா யமுநா தடாந்தே தவாநுசக்ரு: கில சேஷ்டிதாநி விசித்ய பூயோSபி ததைவ மாநாத் த்வயா விமுக்தாம் தத்ருசுச்ச ராதாம் த்வத் ஆத்மிகா: தா யமுநா தட அந்தே தவ அநுசக்ரு: கில சேஷ்டிதாநி விசித்ய பூய: அபி ததா ஏவ மாநாத் த்வயா விமுக்தாம் தத்ருசு: ச ராதாம் त्वदात्मिकास्ता यमुनातटान्ते तवानुचक्रुः किल चेष्टितानि । विचित्य भूयोऽपि तथैव मानात् त्वया वियुक्तां ददृशुश्च राधाम्

குருவாயூரப்பா! உன்னிடம் தங்களை ஒப்படைத்தவர்களான அந்தக் கோபிகைகள் நீ இதுவரை செய்து வந்த லீலைகளை செய்து பார்த்து மகிழ்ந்தனர். பின்னர் மீண்டும் உன்னைத் தேடத் தொடங்கினர். அப்போது உன்னால் கர்வத்தின் காரணமாக கைவிடப்பட்ட ராதையைக் கண்டனர் அல்லவா?