Sriman Narayaneeyam - Dasaka 67 - ராஸ க்ரீடை - 3 (ச்லோகம் 683)

Dasaka 67 - ராஸ க்ரீடை - 3

நிரீக்ஷிதோSயம் ஸதி பங்கஜாக்ஷ: புரோ மமேத்யாகுலமாலபந்தீ த்வாம் பாவநா சக்ஷுஷி வீக்ஷ்ய காசித் தாபம் ஸகீநாம் த்விகுணீ சகார நிரீக்ஷித: அயம் ஸதி பங்கஜ அக்ஷ: புர: மம இதி ஆகுலம் ஆலபந்தீ த்வாம் பாவநா சக்ஷுஷி வீக்ஷ்ய காசித் தாபம் ஸகீநாம் த்விகுணீ சகார निरीक्षितोऽयं सखि पङ्कजाक्षः पुरो ममेत्याकुलमालपन्ती । त्वां भावनाचक्षुषि वीक्ष्य काचित्तापं सखीनां द्विगुणीचकार

குருவாயூரப்பா! அந்த நேரத்தில் ஒரு கோபிகை மட்டும் உன்னைத் தன் ஞானக் கண்களில் கண்டாள். அவள் மற்றவர்களிடம், “தோழிகளே! தாமரை போன்ற அழகிய கண்கள் உடையவனை நான் இப்போது கண்டேன்”, என்றாள். இதனைக் கேட்ட மற்றவர்களின் துன்பம் பல மடங்கு ஆகியது.